ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். இறுதியில் 67 புள்ளி 97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுமா அல்லது நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.