திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணன் மனைவியை பட்டப்பகலில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன், வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய தம்பி சுரேஷ், மனைவியை விட்டு பிரிந்து அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அண்ணன் மனைவி சங்கீதாவிடம் சுரேஷ் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், அண்ணி சங்கீதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.