பிரதமர் மோடியை நடிகர் நாகார்ஜுனா சந்தித்தார்.
தெலுங்கு சினிமாவுக்கு அக்கினேனி நாகேஸ்வர ராவ் அளித்த பங்களிப்பு மிகப்பெரியது என்றும், தனது படங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் என்றும் அழியாத முத்திரையை பதித்தவர் எனவும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் போது புகழாரம் சூட்டியிருந்தார்.
இந்த நிலையில், அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகத்தை அவரது மகனும், நடிகருமான நாகார்ஜுனா பிரதமர் மோடியை சந்தித்து வழங்கினார்.