ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5 -ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் களம் கண்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டது.
17-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயித்து 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்றுள்ளார். 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் நோட்டா பெற்றுள்ளது.
இந்த தேர்தலில், நாம் தமிழர் வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சந்திரகுமார் வெற்றியை திமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.