பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் சிலை உள்ளது. இந்த சிலையை அகற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்ட நிலையில், அதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
தொடர்ந்து இந்த முடிவை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நகராட்சி நிர்வாகம் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.