தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் புறநகர் பகுதியில் சேவல் சண்டை மற்றும் கேசினோ நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கேசினோ போன்ற சூதாட்டு கிளப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 64 பேரை கைது செய்து, 55 சொகுசு கார்கள், 30 லட்சம் ரூபாய் ரொக்கம், 86 சண்டை சேவல்கள், 46 கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.