தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கோயிலுக்குள் இறைச்சி துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தின் தப்பசபுத்ரா பகுதியில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதிகாலை கோயில் நடையை திறந்த அர்ச்சகர், சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து அங்கிருந்த பொதுமக்கள் கோயில் முன்பாக கூடிய நிலையில், காவல்துறையினரும் அங்கு விரைந்தனர். தொடர்ந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், இறைச்சி துண்டுகளை வீசிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.