சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தியாகராஜ சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆதிசேஷ தீர்த்த குளத்தில் உற்சவர் சந்திர சேகரர் – திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர், பஞ்ச தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர், நீராழி மண்டபத்தை ஐந்து முறை வலம் வந்தனர்.
அப்போது, கூடியிருந்த பக்தர்கள் ‘தியாகேசா ஒற்றீசா…’ என விண்ணதிர முழங்கினர். பின்னர், தியாகராஜ சுவாமி பிரமாண்ட மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.