புதுச்சேரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 3 பேர் ஓரு இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.
பத்துக்கன்னு பகுதியில் பயணித்தபோது சாலையோரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.