சென்னையில் பதுங்கிய அசாம் தீவிரவாதி, நாசவேலைக்கு சதி தீட்டமா? என க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை செம்மஞ்சேரி பகுதியில் தீவிரவாதிகள் தொடர்பில் இருந்த அசாம் தீவிரவாதிகள் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், செம்மஞ்சேரி அரசங்கழனி பகுதியில் வாடகை வீட்டில் பதுங்கி இருந்த அசாமை சேர்ந்த அபு சலாம் அலியை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டும் வகையில் செம்மஞ்சேரி பகுதியில் தங்கி இருந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதி அபு சலாம் அலி சென்னையில் வேறு யாருடன் தொடர்பில் இருந்தாரா என்பது பற்றியும் தமிழக கீயூ பிரிவு போலீசார் சிறப்பு பிரிவு போலீசாருடன் சேர்ந்து தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.