உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்று
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, திரிவேணி சங்கமத்தில் நீராடுவது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் என கூறினார். இது உண்மையிலேயே ஒரு தெய்வீக அனுபவம் எனவும் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.