எலான் மஸ்க்குக்கு எதிராக 14 மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க் பரிந்துரைப்படி, பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அதிரடி உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். .
இந்நிலையில் அமெரிக்க அரசு துறையில் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களுக்கு எதிராக மாகாண அரசுகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. மேலும், எலான் மஸ்க்குக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்களை எதிர்த்து 14 மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.