சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தமாகா சார்பில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் பங்கேற்றன. காளை ஒன்றுக்கு 20 நிமிடம் வீதம் 9 வீரர்கள் களம் கண்டு காளைகளை அடக்கினர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.