கன்னியாகுமரி திருநந்திக்கரை சிவன் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் ஒன்றாக திருநந்திக்கரை சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்து திற்பரப்பு பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும், கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.