டிப்பர் லாரி உரிமையாளர்களின் பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கிரஷரில் ஏற்றும் பொருட்களுக்கு டிரான்சிட் பாஸ் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் கடந்த 10ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல. ராசாமணி, இப்பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்க தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.