மூணார் பகுதியில் கடைகளை சூறையாடிய காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூணாறு பகுதியில் சுற்றித்திரியும் படையப்பா யானைக்கு மதம் பிடித்ததற்கான அறிகுறி தென்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மூணார் பகுதியில் முகாமிட்டு கடைகளை சூறையாடிய படையப்பா யானையை, வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
இருப்பினும், வனப்பகுதிக்குள் செல்ல மறுத்த படையப்பா யானை, மீண்டும் தேவிகுளம் – மூணார் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ளது. எனவே, யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுகோரிக்கை விடுத்துள்ளனர்.