மத்திய பிரதேசத்தில் மிதமான போதை தரும் மதுபானங்களை மட்டும் விற்பனை செய்யும் பிரத்யேக மதுபான கூடங்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.
இங்கு, பீர், ஒயின் உள்ளிட்ட மது வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், ஆல்கஹால் அளவில் 10 சதவீதம் மிகாமல் உள்ள பானங்கள் மட்டுமே விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் புதிய கலால் கொள்கை சமீபத்தில் நடைமுறைக்கு வந்ததையடுத்து, 17 புனித தலங்கள் உட்பட 19 நகரங்களில் மதுபான விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.