ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் ஆபத்தில்லாத பகுதிகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபத்ததை உணராமல் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் சிலர் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.