திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் தான் எழுதிய ஜிகுபா என்ற கதையிலிருந்து நகலெடுக்கப்பட்டது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், பதிப்புரிமை சட்டத்தையும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தையும் இயக்குநர் சங்கர் மீறியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஷங்கருக்கு சொந்தமான 10 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.