ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மைசூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி டீசல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைச்சாலையில் செம்மன் திட்டு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்த சுமார் 10 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணாகியது.