சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் எலான் மஸ்க் பொய் சொல்வதாக விண்வெளி வீரர் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், எலான் மஸ்க்கும் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய எலான் மஸ்க்,
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக விண்வெளி மையத்திலேயே விடப்பட்டனர் என தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை ஆன்ரியாஸ் மோகன்சென் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, என்ன ஒரு பொய் என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை பதிலுக்கு முட்டாள் என்று மஸ்க் திட்டியுள்ளார்.