கிருஷ்ணரின் கர்மபூமி என போற்றப்படும் துவாரகா கடலில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அகழாய்வை தொடங்கியுள்ளது.
குஜராத் மாநிலம் துவாரகா ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது. துவாரகா மற்றும் பெட் துவாரகாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு 18 ஆண்டுகளாக அங்கு எந்த அகழாய்வு பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் துவாரகா கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளை தொடங்கியதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.