தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள காமராஜர் விளையாட்டு அரங்கை பேருராட்சி நிர்வாகம் சீரமைத்தது.
குலசேகரம் மைய பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த காமராஜர் விளையாட்டு அரங்கில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க குழி தோண்டி அந்த மண் கற்களை மைதானத்தில் கொட்டி வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக கொட்டபட்ட மண் அகற்ற படாமலும் குழிகள் மூடப்படாமல் காட்சியளித்தது. இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், பேருராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.