கன்னியாகுமரி அருகே சூப்பர் மாக்கெட்டில் புகுந்து இளம் பெண்ணின் தலைமுடியை பிடித்து சரமாரிய தாக்கிய நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த வில்சன் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், வில்சனின் சகோதரன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வில்சனின் மனைவி சிமா, கணவரை தாக்க வந்த உறவினர் மீது மிளகாய்பொடி தூவி காப்பாற்றி உள்ளார். இந்நிலையில், அங்குள்ள சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த சிமாவின் தலைமுடியை, ஜான் என்பவர் பிடித்து இழுத்து சென்றுள்ளார்.
மேலும் தனது நண்பன் மீது எப்படி மிளகாய் பொடி வீசுவாய் என கூறி சரமாரியாக தாக்கியுள்ளார். இளம்பெண்ணை கடைக்குள் புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.