புதிய வகை கொரோனா மீண்டும் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சீன ஆய்வாளர்கள் வௌவாலால் ஏற்படும் புதிய வகை கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளனர். கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டது.
புதிய வகை கொரோனா வைரஸுக்கு ஹெச்.கே.யு.5 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிப்பதுடன், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் பேரழிவை ஏற்படுத்துமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.