தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மறுசீரமைத்தும், புதிய உறுப்பினர்களை நியமித்தும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி, டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தற்போது,
அந்த கமிட்டியை மறுசீரமைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விசாகா கமிட்டியின் தலைவராக சீமா அகர்வால் தொடர்வார் என தெரிவித்துள்ளார்.
மேலும், விசாகா கமிட்டி குழு உறுப்பினர்களாக சென்னை காவல் துணை தலைமையக கூடுதல் ஆணையர் கபில் குமார் சர்த்கர், தலைமையக ஐஜி சாமூண்டீஸ்வரி, சிபிசிஐடி எஸ்பி சண்முக பிரியா, தலைமையக அதிகாரி ரவிச்சந்திரன், சர்வதேச நீதிக்குழு மேலாண்மை அதிகாரி லொரேட்டா ஜோனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.