உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு வரும் மகாசிவராத்திரியில் நிறைவடைவதையொட்டி, பிரேசிலில் இருந்து வந்த 20 பேர் கொண்ட சிவபக்தர்கள் குழு திரிவேணி சங்கமத்தில் நீராடியது.
மகாகும்பமேளாவில் நீராடியதால் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மகாகும்பமேளாவில் உலகம் முழுவதுமிருந்து வந்த 62 கோடிக்கும் அதிகமானவர்கள் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் மகா கும்பமேளா நிகழ்வு நிறைவடையவுள்ளதால் வெளிநாட்டு ஆன்மிக பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.