சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த அணி 46 புள்ளி 1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன.