ஜெர்மனி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரெட்ரிக் மெர்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 630 இடங்களில், பழமைவாத கூட்டணி 208 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரெட்ரிக் அளித்த வாக்குறுதியே அவரது வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறப்படும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிரெட்ரிக் மெர்சுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவைப் போலவே ஜெர்மனி மக்களும் முட்டாள்தனமான கொள்கைகளை புறந்தள்ளியுள்ளதாக கூறியுள்ளார். எரிசக்தி மற்றும் குடியேற்ற விவகாரத்தில் ஜெர்மனி மக்கள் சரியான முடிவை எடுத்து தேர்தலில் வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.