தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெரிசலை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் தொழில்முனைவோர் இ-உச்சி மாநாடு பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி,
இ-உச்சி மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். கும்பமேளாவில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர் எனக்கூறிய அவர், தொழில்நுட்ப உதவியுடன் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.