சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஓசூரில் இருந்து ஆந்திராவிற்கு 22 டன் அரிசி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வாகனங்களில் எடுத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சின்ன எலசகிரி பகுதியில், சேவா சங்கம் சார்பில், மகா சிவாரத்திரி முன்னிட்டு ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில், 9-வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக, சேவா சங்கம் நிர்வாகி சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யும் வகையில், 2 வாகனங்களில் 22 டன் அரிசி, காய்கறிகள், தர்பூசணி, மளிகை பொருட்கள் மற்றும் சேலை, ஜாக்கெட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர்.