ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின், லூதியானா மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், தங்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சீவ் அரோரா போட்டியிடுவார் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
இந்த தொகுதிக்கு தேர்தல் கமிஷன் இன்னும் இடைத்தேர்தல் தேதியையே அறிவிக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சி தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது.
இதனால் சஞ்சீவ் அரோரா வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு பதிலாக கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என கூறப்படுகிறது.