திருவள்ளூர் குரு முத்தீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அடி உயர சிவலிங்கத்திற்கு, சிவராத்திரியை முன்னிட்டு ராட்சத கிரேன் மூலம் 1008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மிக பிரசித்தி பெற்ற பொம்மியம்மாள் – குரு முத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு அந்த கோயிலில் உள்ள 41 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
குறிப்பாக ராட்சத கிரேன் உதவியுடன் 1008 லிட்டர் பாலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். கோயிலின் இரண்டு கோபுர நுழைவாயில் வழியாக வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.