தனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வருவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அரசாங்க திறன் துறை தலைவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தான் நிறைய விமர்சனங்களையும், நிறைய கொலை மிரட்டல்களையும் எதிர்கொள்கிறேன் என தெரிவித்தார்.