வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகுக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசு முடிவு செய்துள்ளது.