பிராக் செஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியை இந்திய வீரர் பிரக்ஞானந்தா ‘டிரா’ செய்தார்.
செக்குடியரசில் நடைபெற்று வரும் இந்த செஸ் தொடரில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று போட்டியில் செக்குடியரசின் டேவிட் நவாராவை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இந்த போட்டி 66ஆவது காய் நகர்த்தலில் ட்ராவில் முடிந்தது.