மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழவும், 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீராட்டு விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
வகுரணி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோயிலில், மாசி சிவராத்திரி திருவிழாவை ஒட்டி, 7 கிராம மக்கள் வீட்டிலிருந்து மஞ்சள் நீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் காமாட்சியம்மனை வணங்கி கோவில் முன்பு இருந்த தொட்டியில் மஞ்சள் நீரை ஊற்றினர்.
இந்த மஞ்சள் நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்று தெளித்தால் நோய் நொடி வராது என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது. மேலும், இந்த 7 கிராமத்திலும் உள்ள மாமன், மைத்துனர்கள் மீதும் மஞ்சள் நீரை ஊற்றி, திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர்.