உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் மகாகும்பமேளா புனித நீரைக் கொண்டு செல்ல, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பமேளா நிகழ்ச்சியில் 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
இந்நிலையில் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாத உத்தரப்பிரதேச மக்களுக்காக 75 மாவட்டங்களுக்கும் திரிவேணி சங்கம புனித நீரை கொண்டு செல்ல யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 365 தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது.