கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதில் அரசியல் இல்லை என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பாஜகவினருடன் பங்கேற்றது சர்ச்சையானது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள டி.கே.சிவக்குமார், தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என தெரிவித்தார். மேலும், இதுகுறித்து விமர்சிப்பவர்களுக்கு தன்னால் பதிலளிக்க முடியாது எனவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.