நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த சூழலில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும், குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன், வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.