அமெரிக்க டாலருக்கு மாற்று நாணயத்தை கண்டறிவதில் இருந்து பிரிக்ஸ் நாடுகள் பின் வாங்கப்போவதில்லை என பிரேசில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு பதிலாக மாற்று நாணயத்தை பயன்படுத்த முயற்சித்தால் 150 சதவீத வரி விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு, பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரிக்ஸ் நாடுகள் உறுதி பூண்டுள்ளதாகவும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் தங்களை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.