நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நுழைவாயிலில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சமீப காலமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயில் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பர்லியார் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.