பூந்தமல்லியில் 6 வயது மகனைக் கொலை செய்த வழக்கில் சிறுவனின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரையான்சாவடியைச் சேர்ந்த மீனாட்சி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்ப பிரச்னையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தனது 6 வயது மகனை கொன்று, உடலை எரித்து கால்வாயில் வீசிய வழக்கில், மீனாட்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், 6 ஆண்டுகளுக்கு பின் ஆதாரங்களுடன் குற்றம் நிரூபணமானதையடுத்து நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.