பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
சென்னை தி.நகரில் பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். தொடர்ந்து பாமகவின் 18-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் What bro,very wrong bro என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு Sorry bro …. Next question bro என அன்புமணி பதிலளித்ததால் நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டது.