முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் பெண் நிர்வாகிக்கு வேட்டி கொடுத்து, கேரளா பெண்களை போல் சேலையாக கட்டி கொண்டால் நன்றாக இருக்கும் என அமைச்சர் நாசர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி, பூந்தமல்லி உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி வழங்கப்பட்ட நிலையில் பெண் நிர்வாகி ஒருவருக்கு வேட்டியை வழங்குமாறு அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
கேரள பெண்கள் ஓணம் பண்டிகைக்கு வேட்டியை புடவையாக கட்டிக் கொள்வதை போல் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்கும் என அமைச்சர் நாசர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.