தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆதில். இவர் தனது நண்பருடன் தென்காசி மாவட்டம், குற்றாலத்திற்கு சொகுசு காரில் சுற்றுலா வந்துள்ளார். அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார்.
ஆயிரப்பேரி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதையடுத்து காரில் இருந்து இருவரும் கீழே இறங்கிய நிலையில், கார் தீ பற்றி எரிந்தது.
தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.