போதை பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் மோடி அரசு மிக தீவிரமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா முழுவதும் 12 வெவ்வேறு வழக்குகளில் 29 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இளைஞர்களை அடிமைத்தனத்தின் இருண்ட படுகுழியில் இழுத்துச் செல்லும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் மோடி அரசு எந்தவித தயக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.