மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில் ஜல்காவன் மாவட்டத்தின் முக்திநகர் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில், மத்திய இணையமைச்சர் ரக்சா கட்சேவின் மகளும் கலந்து கொண்டார்.
அப்போது இளைஞர்கள் சிலர் கும்பலாக சென்று மத்திய அமைச்சரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.