மகா கும்ப மேளாவையொட்டி சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார்.
நாள்தோறும் போலீசார் 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும், இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுமக்களுக்கு இரவு பகலாக பாதுகாப்பளித்த போலீசாரின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.