டாடாவின் சஃபாரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி மொத்தம் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவில் சஃபாரி மாடலின் நீண்ட பயணத்தை குறிக்கும் வகையிலும், இந்த எஸ்யூவி-யின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையிலும் சஃபாரி ரேஞ்சில் டாடா நிறுவனம் Stealth என்ற லேட்டஸ்ட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய எடிஷன் ரூ.25.09 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது 6 மற்றும் 7 சீட்ஸ்கள் கொண்ட கான்ஃபிகரேஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.